கோபாலப்பட்டிணம் முக்கிய தெருக்களுக்கு GPM மக்கள் மேடை சார்பாக வைக்கப்பட்ட பெயர் பலகை




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் முக்கிய தெருக்களுக்கு  GPM மக்கள் மேடை சார்பாக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. 

ஊரில் பல வருடங்களாக தெருக்களுக்கு பெயர் பலகை இல்லாமல் இருந்தது அதை 17.11.2014 அன்று உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தால்  ஊரில் உள்ள அனைத்து தெருக்களையும் உள்ளடக்கி மேப் (MAP) உருவாக்கப்பட்டது. அந்த அடிப்படையில் 24.11.2014 அன்று அனைத்து தெருக்களுக்கும் உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் இளைஞர்கள் சார்பாக தெருக்களுக்கு சுவற்றில் பெயின்ட் மூலம் எழுதப்பட்டது. காலப்போக்கில் அது மறைந்து விட்டது. தற்போது GPM  மக்கள் மேடை சார்பாக  முதலாவதாக முக்கிய வீதிகளில் 10 இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகை உருவாக்கிய உமர் முக்தார் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்திற்கும், பெயர் பலகை வைத்த,GPM மக்கள் மேடைக்கும் GPM மீடியா சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்

புதிய தெருக்கள் பெயர்களை GPM மீடியா மரண செய்திகளில் பதிவிட்டு வருகிறோம்

தற்போது Google Mapல் புதிய தெருக்கள் பெயர் காண்பிக்கப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது 

 உதாரணமாக: மக்கா தெரு (பெரிய பள்ளிவாசல் தெரு)

ஊர் தெருக்கள்

மக்கா தெரு - பெரிய பள்ளிவாசல் தெரு & கடற்கரை தெரு 

மதினா தெரு - காட்டுக்குளம் பள்ளிவாசல் தெரு 

தாயிப் தெரு - VIP நகர் 

ஜம் ஜம் தெரு - பழைய காலணி 

அக்ஸா தெரு - சின்ன பள்ளிவாசல் தெரு 

அரஃபா தெரு - பெண்கள் மதரஸா தெரு 

ஷபா தெரு - நடுத் தெரு

ஹிரா தெரு - கபூர் காம்ப்ளக்ஸ் பகுதி

குஃபா தெரு - அரண்மனை தோப்பு பகுதி 

அவுலியா நகர் - அவுலியா நகர்



















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments