புதுக்கோட்டை இரயில் பயணாளர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டெல்லியில் ரயில்வே வாரிய தலைவர் ஜெய் வர்மா சின்ஹாவை சந்தித்து மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா M.P வலியுறுத்தல்




புதுக்கோட்டை இரயில் பயணாளர்களுக்கான  கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டெல்லியில் ரயில்வே வாரிய தலைவர் ஜெய் வர்மா சின்ஹாவை சந்தித்து மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா M.P வலியுறுத்தினார் 

(31-07-2024) இந்திய இரயில்வே வாரியத் தலைவர் திருமதி. ஜெயா வர்மா சின்ஹா அவர்களைச் சந்தித்து புதுக்கோட்டை இரயில் பயணாளர்களுக்கான பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தபோது.

1) 16617/18 ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் ( புதுக்கோட்டை வழியாகச் செல்லும்)
வாராந்திர எக்ஸ்பிரஸ் இரயிலை தினசரி இயக்கிட வேண்டும்.

2) 09419/20 அகமதாபாத் - திருச்சி- அகமதாபாத் வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் இரயிலை புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் (மண்டபம்) வரை நீட்டிப்பு செய்து வாரம் மூன்று முறை இயக்கிட வேண்டும்.

3) 16861/62  புதுச்சேரி - கன்னியாகுமரி (புதுக்கோட்டை வழியாகச் செல்லும்)
வாராந்திர எக்ஸ்பிரஸ் இரயிலை தினசரி இயக்கிட வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments