வடகாட்டில் தொடர் மழை: தூர்வாரி சீரமைக்கப்பட்ட நாங்குளம் நிரம்பியது 100 நாள் பணியாளர்களுக்கு பாராட்டு




புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி செல்லும் வழியில் உள்ளது நாங்குளம், இக்குளம் தண்ணீர் இன்றி வறண்ட நிலையில் கிடந்தது. இந்த நிலையில் வடகாடு ஊராட்சி நூறுநாள் பணியாளர்கள் மூலமாக, இக்குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெற்றது. இதற்கு கைமேல் பலனாக இப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால் நூறு நாள் பணியாளர்களால் புனரமைப்பு செய்யப்பட்ட குளம் மழை நீரால் நிரம்பியது. இதனைக்கண்டு வடகாடு ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன் உள்பட பலரும் நூறு நாள் பணியாளர்களை பாராட்டி வருகின்றனர். இதேபோல் அனைத்து குளங்களையும் தூர்வாரி ஆழப்படுத்தி மழை காலங்களில் பெய்யும் மழை நீரை சேமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments