தொண்டி அருகே பாய்மர படகு போட்டி விறுவிறுப்பாக நடந்தது. கடற்கரையில் நின்று பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
பாய்மர படகு போட்டி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே நம்புதாளையில் செல்வ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூக்குழி திருவிழாவையொட்டி பாய்மர படகு போட்டி நடந்தது. இப்போட்டியில் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 27 பாய்மர படகுகளுடன் பலர் பங்கேற்றனர்.
7 கடல்மைல் தூரம் போட்டி நடந்தது. ஒரு படகுக்கு 6 பேர் வீதம் போட்டியில் கலந்துகொண்டனர்.
முதல் பரிசு
முடிவில், இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசை மோர்பண்ணையை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரின் படகு பெற்றது. 2-வது இடத்தை நம்புதாளை முனீஸ்வரன் படகும், 3-வது இடத்தை நம்புதாளை அம்பலம், 4-வதாக தொண்டி புதுக்குடி ராமா, 5-வதாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் புதுக்குடி குணா, 6-வதாக திருப்பாலைக்குடி ராஜாங்கம் ஆகியோரின் படகுகள் பிடித்தன.
இந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் மாநில செயலாளர் நம்புதாளை முத்துராக்கு, நம்புதாளை ஊராட்சித் தலைவர் பாண்டிசெல்வி ஆறுமுகம், கிராம தலைவர் முத்துராக்கு, பொருளாளர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் சுமதி முத்து ராக்கு, ஆகியோர் பரிசு வழங்கினர்.
ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்
இதில் வெற்றி பெற்றவர்களுக்கான கோப்பைகளை பாபா குமரேசன் வழங்கினார். போட்டியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடற்கரையில் நின்று ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். தொண்டி கடலோர பாதுகாப்பு குழு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். விழா ஏற்பாடுகளை நம்புதாளை வீர வன்னியர் படையாட்சி தெரு கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.