புதுமடத்திற்கு கிடைத்த புதிய பஸ்! SDPI கட்சியின் தொடர்ச்சியான கோரிக்கை ஏற்று அரசு நடவடிக்கை





புதுமடத்தில் 7 மற்றும் 7A பஸ்கள் மிக மோசமான சூழ்நிலையில் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன, அந்த பேருந்துகளை மாற்றி புதிய பேருந்து கேட்டு SDPI அரசுக்கு தொடர்ச்சியான கோரிக்கை வைத்தது.

இது குறித்து SDPI வெளியிட்டுள்ள அறிக்கையில் 

கோரிக்கையின் மனு:
1. 2021ல் முதல்வருக்கு மனு செய்தோம். மனு எண்: TN/TRANS/RMD/P/PORTAL/15MAY21/353607

இந்த மனு மீது நடவடிக்கை இல்லாததால் ஜூலை 2024ல் பழைய மனுவை சுட்டிக்காட்டி, இதுவரை ஏற்பட்ட விபத்துகளின் கோப்புகளை இணைத்து மீண்டும முதல்வருக்கு மனு செய்தோம்! மனு எண்: TNSTC(TN/TRANS/RMD/P/PORRAL/01JUL24//8306227) ஆகும். இந்த மனுவில் இனி ஏற்படும் விபத்துகள், உயிரிழப்புகளுக்கு அரசு பொருப்பு என எழுதி மனு செய்தோம். இந்த மனுவின் மீது தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது SDPI கட்சிக்கு கிடைத்த முக்கிய வெற்றி ஆகும். அரசு SDPI க்கு கொடுத்த வாக்குறுதி படி நல்ல நிலையில் உள்ள பஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் தோற்றமும் அழகுடன் உள்ளது. அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments