திருச்சி-அபுதாபி இடையே புதிய விமான சேவை முதல் விமானத்துக்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு






திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர குறிப்பிட்ட நாட்களில் அபுதாபிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் விமானம் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் புதிய விமான சேவை, நேரடியாக திருச்சியில் இருந்து அபுதாபிக்கு இயக்கப்படுவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளை விமான நிறுவனத்தினர் மேற்கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று அந்த விமானம் இயக்கப்பட்டது. இதில் அபுதாபியில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு முதல் விமானம் காலை 6.53 மணிக்கு வந்தது. இந்த விமானத்திற்கு திருச்சி விமான நிலையத்தின் சார்பில் ‘வாட்டர் சல்யூட்’ முறையில் தண்ணீரை பீய்ச்சி அடித்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விமானத்தில் 169 பயணிகள் வந்தனர். மீண்டும் இந்த விமானம் காலை 7.30 மணியளவில் 181 பயணிகளுடன் அபுதாபி நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த விமான சேவையானது வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படுவதாக விமான நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் இந்த விமானத்தின் மூலம் பயன்பெற வாய்ப்புள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments