GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு சார்பாக சோலார் அமைப்பதற்கு ரூ 4,60,000 தொகையினை ஜமாத் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.





புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம்  ஜமாத் சார்பாக நெடுங்குளம் அருகில் ஆழ்துளை கிணறு போர் அமைக்கப்பட்டது அந்த போர் இயங்குவதற்கு சோலார் அமைக்கப்படுகிறது அதற்கு ரூபாய் 4 லட்சம் மதிப்பாகும் அந்தத் தொகையை ஊர் ஜமாத் GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு உறுப்பினர்களிடம் கோரிக்கை வைத்தனர் அந்த அடிப்படையில் கடந்த ஆறு நாட்களாக GPM சொந்தங்கள் வாட்ஸ்அப் குழு சார்பாக வசூல் செய்யப்பட்டது. மொத்த வசூல் தொகை ரூபாய் 4 லட்சத்து 60 ஆயிரம் இன்று 12.08.2024 திங்கள் கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு ஊர் ஜமாத் நிர்வாகிகளிடம் GPM சொந்தங்கள் வாட்ஸ் அப் குழு உறுப்பினர்கள் அந்த தொகையை ஜமாத் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர் இதற்காக பொருளாதார உதவி செய்த உடல் உழைப்பு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைரன் மேலும் உங்களுடைய பணிகள் மென்மேலும் தொடர GPM மீடியா சார்பாக மனதார பாராட்டுகிறோம்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments