புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம்




புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சுதந்திர தின விழா

நாடு முழுவதும் சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. புதுக்கோட்டையில் ஆயுதப்படை மைாதனத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஆயுதப்படை மைதானத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆயுதப்படை மைதானத்தில் அதிகாரிகள், பார்வையாளர்கள் அமர்வதற்காக விழா பந்தல் அமைக்கும் பணி நடைபெறுகிறது. தேசிய கொடி கம்பத்தில் சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

தேசிய கொடி வர்ணம்

இதற்கிடையில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் சுற்றுச்சுவரில் தேசிய கொடியின் வர்ணம் பூசும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 200 அடி நீளத்தில் மூவர்ண கொடியின் நிறத்தின் வர்ணம் பூசும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. சுற்றுச்சுவரில் விளம்பர சுவரொட்டிகள் உள்ளிட்டவை ஒட்டப்படுவதை தடுப்பதற்காகவும் தன்னார்வலர்கள் மூலம் போலீஸ் துறையினர் இப்பணியை மேற்கொண்டுள்ளனர். சுதந்திர தினவிழாவையொட்டி அணிவகுப்பு மரியாதைக்கான பயிற்சியில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விழாவில் கலை நிகழ்ச்சிகளுக்காக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments