தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள புதுக்கோட்டை உள்பட 4 மாநகராட்சிகளுடன் இணையும் ஊராட்சிகள் எவை? தமிழக அரசு அறிவிப்பு




தமிழகத்தில் புதிதாகஉருவாகியுள்ள புதுக்கோட்டை உள்பட 4 மாநகராட்சிகளுடன் இணையும் ஊராட்சிகள் எவை? என்பது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

காரைக்குடி மாநகராட்சி

தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல்,புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 4 புதிய மாநகராட்சிகள் சமீபத்தில் உதயமாகின. இவற்றை அமைத்து உருவாக்கப்பட்டதற்கான ஆணைகளை, சம்பந்தப்பட்ட மாநகராட்சிகளின் மேயர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந் தேதி வழங்கினார். தற்போது அந்த ஆணைகள், தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. புதிதாக உருவாகியுள்ள மாநகராட்சிகளுடன் இணைக்கப்படும் பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் பற்றிய விவரங்கள் அதில் கூறப்பட்டுள்ளன.அதன்படி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடிமாநகராட்சியை அமைத்துஉருவாக்குவதற்காக, காரைக்குடி நகராட்சியுடன் கண்டனூர், கோட்டையூர்பேரூராட்சிகள், சங்கராபுரம், கோவிலூர், இலுப்பக்குடி, அரியக்குடி, தளக்காவூர் (மானகிரி) ஆகிய 5 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாநகராட்சியை அமைத்துஉருவாக்குவதற்காக திருவண்ணாமலை நகராட்சியுடன் வேங்கிக்கால், சின்னகாங்கேயனூர், சோ.கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, ஏந்தல், தென்மாத்தூர், கீழ்கச்சிராப்பட்டு, மேலதிக்கான், சாவல்பூண்டி, நல்லவன்பாளையம், கனந்தம்பூண்டி, ஆணாய்பிறந்தான், அத்தியந்தல்,அடிஅண்ணாமலை, தேவனந்தல், ஆடையூர், துர்க்கை நம்மியந்தல், மலப்பாம்பாடி ஆகிய 18 கிராம ஊராட்சிகளையும், அடிஅண்ணாமலை பாதுகாக்கப்பட்ட காடுகள் பகுதியும் இணைக்கப்படுகின்றன.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாநகராட்சியை அமைத்து உருவாக்குவதற்காக, புதுக்கோட்டை நகராட்சியுடன் திருக்கட்டளை, திருமலைராய சமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, தேக்காட்டுர் (ஒரு பகுதி), 9ஏ மற்றும் 9பி நந்தம்பண்ணை, வெள்ளனூர் (ஒரு பகுதி), திருவேங்கைவாசல் (ஒரு பகுதி), வாகவாசல், முள்ளூர் ஆகிய 11 கிராம ஊராட்சிகள் மற்றும் கஸ்பா காடுகள் (மேற்கு) பகுதிகள் இணைக்கப்படுகின்றன.

நாமக்கல்

நாமக்கல் மாநகராட்சியை அமைத்து உருவாக்குவதற்காக நாமக்கல் நகராட்சியுடன் வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், மரூர்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டாம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி, ஆகிய 12 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments