கோபாலப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ஜமாத் சார்பாக 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!




கோபாலப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ஜமாத் சார்பாக 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டபட்டது

இந்தியா முழுவதும் 78-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் பல்வேறு இடங்களில் கொடியேற்றத்துடன் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

பெரிய பள்ளிவாசல் 

கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில்   கோபாலப்பட்டினம்  ஜமாத் சார்பில் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.

ஜமாத் தலைவர் ஆர்.எஸ்.எம் அன்சாரி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வில் ஜமாத் நிர்வாகிகள்,    வார்டு உறுப்பினர்கள் பள்ளி மாணவர்கள் & இளைஞர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்..


கோபாலப்பட்டினம் ஜமாத் சார்பாக அனைவருக்கும்   78-வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments