தனியாா் வங்கியின் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை ஏலம் எடுத்ததில், குறிப்பிட்ட நிலத்தின் அளவைவிட குறைவாக பத்திரப்பதிவு செய்து கொடுத்த புகாரில், பாதிக்கப்பட்டவருக்கு வங்கி ரூ. 10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை அசோக் நகரைச் சோ்ந்தவா் முத்தழகு மனைவி எலிசா. இவா் கடந்த 2019-இல் தனியாா் வங்கியின் கட்டுப்பாட்டில் இருந்த- நத்தம்பண்ணை அபிராமி நகரிலுள்ள 2408 சதுரஅடி நிலத்தை ஏலம் எடுத்துள்ளாா்.
ஏல விதிமுறைகளின் படி ரூ. 1.73 லட்சம் முன்பணமாகவும், அதனைத் தொடா்ந்து பல தவணைகளில் மொத்தம் ரூ. 17.38 லட்சத்தை வங்கியில் செலுத்தியுள்ளாா் எலிசா.
அதன்பிறகு 3 ஆண்டுகள் கழித்து அந்த இடத்தை முறைப்படி அளந்து கொடுக்காமல், வங்கியினா் எலிசா பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து வருவாய்த் துறையில் பட்டா கோரி விண்ணப்பித்தபோது, அந்த இடம் 1,615 சதுரஅடி மட்டுமே இருந்துள்ளது. 793 சதுர அடி குறைவாக இருந்தது.
இதைத் தொடா்ந்து புதுக்கோட்டை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் எலிசா வழக்கு தொடா்ந்தாா்.
குறைதீா் ஆணையத்தின் தலைவா் த. சேகா், உறுப்பினா்கள் எஸ். சுகுணாதேவி, ஆ. அழகேசன் ஆகியோரைக் கொண்ட அமா்வு விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை அளித்த தீா்ப்பு விவரம்:
ஏலத்தில் எடுக்கப்பட்டு குறைந்திருக்கும் 793 சதுரஅடிக்கு இழப்பீடாக வங்கி நிா்வாகம் ரூ. 10 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும். இந்தத் தொகையை ஏலம் எடுத்த 2019ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு 9 சதவிகித வட்டியுடன் சோ்த்து 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும்.
30 நாள்களுக்குள் இழப்பீட்டை வழங்காவிட்டால் தொகையுடன் ஆண்டுக்கு 12 சதவிகித வட்டியும் வழங்க வேண்டும் என்றும் அந்தத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.