திருச்சி விமான நிலைய புதிய முனையத்தில் இருந்து பஸ்கள் இயக்கம் அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்




திருச்சி விமான நிலைய புதிய முனையம் புதுக்கோட்டை சாலையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மேலும் ஆட்டோக்கள் செல்லவும் அனுமதியில்லை. இதனால் விமான பயணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் புதுக்கோட்டை சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து புதிய முனையத்துக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. எனவே விமான நிலைய முனையத்தில் இருந்து மத்திய பஸ் நிலையத்துக்கு பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் படி நேற்று பஸ் இயக்கப்பட்டது. காலை 7 மணி அளவில் நடந்த இந்த நிகழ்ச்சியை அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், விமான நிலைய இயக்குனர் (பொறுப்பு) கோபாலகிருஷ்ணன், முனைய மேலாளர்சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments