பொதுமக்கள் தர்ணா
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக மணமேல்குடி அருகே குடுவையூர் கிராமத்தில் இருந்து பொதுமக்கள் பலர் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தங்களது கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி கோரி பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும், சாலை, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மனு கொடுக்க குறிப்பிட்ட நபர்களை மட்டும் உள்ளே செல்ல கூறினர். ஆனால் அவர்கள் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் எனக்கூறி தனித்தனியாக மனு கொடுக்க சென்றனர். மேலும் கலெக்டரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
660 மனுக்கள்
இதேபோல பொதுமக்கள் பலர் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 660 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் ரூ.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அவர் வழங்கினார். மேலும் வம்பன் நால் ரோடு வியாபாரிகள் சங்கத்தினர் வயநாடு நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரத்தை கலெக்டரிடம் வழங்கினர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) ரம்யாதேவி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.