போதுமான பயணிகள் வருகை இல்லாத காரணத்தால் நாகை-இலங்கை இடையே வாரத்தில் 3 நாட்கள் மட்டும் கப்பல் சேவை




நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கப்பல் போக்குவரத்து கடந்த 16-ந் தேதி மீண்டும் தொடங்கியது.

சிவகங்கை என்ற பெயரிடப்பட்ட இந்த கப்பல் கடந்த 16-ந் தேதி நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட்டது. பின்னர் 18-ந் தேதி முதல் இரு மார்க்கத்திலும் இந்த கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக போதுமான பயணிகள் வருகை இல்லாத காரணத்தாலும், பயணிகள் முன்பதிவை அதிகரிக்க செய்யும் வகையிலும் கப்பல் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த மாதம்(செப்டம்பர்) 15-ந் தேதி வரை நாகை-இலங்கை இடையே வாரத்தில் 3 நாட்கள் மட்டும்(செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) கப்பல் இயக்கப்படும் என கப்பல் நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments