இந்தியா உள்பட 35 நாடுகளுக்கு இலவச விசா இலங்கை அரசு அறிவிப்பு




இந்தியா உள்பட 35 நாடுகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி

நமது அண்டை நாடான இலங்கை கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதில் இருந்து மீண்டு வர இலங்கை அரசு தீவிரமாக முயன்று வருகிறது.

அந்த வகையில் நாட்டின் பெருமளவு வருவாய் சுற்றுலாத்துறை மூலமே கிடைப்பதால் அதை வளப்படுத்த இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா உள்பட 35 நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்பட உள்ளதாக அந்த நாட்டின் அரசு அறிவித்துள்ளது.



இந்தியர்களுக்கு இலவச விசா

சுற்றுலா அமைச்சகத்தின் ஆலோசகர் ஹரின் பெர்னாண்டோ இதுப்பற்றி கூறுகையில், “இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த இலவச விசா திட்டம் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும்” என்றார். மேலும் அவர், “பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இலங்கைக்கு ஆண்டுதோறும் 50 லட்சம் சுற்றுலா பயணிகளின் இலக்கை அடைவதுமே இந்த முடிவின் நோக்கம்” எனவும் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments