வேளாங்கண்ணி மாதா தேவாலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஒரியூர் , பட்டுக்கோட்டை உட்பட பல முக்கிய நகரங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் அறிவிப்பு




வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு பஸ்கள் இயக்கம்

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு 1,050 சிறப்பு பஸ்கள் வருகிற 27-ந்தேதி முதல் அடுத்தமாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி வரை இயக்கப்பட உள்ளது.

இத்திருவிழாவை முன்னிட்டு இந்தாண்டும் பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு லிமிடெட் மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களில் இருந்தும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு மொத்தம் 1,050 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

ஒப்பந்த அடிப்படையில்

எனவே பயணிகளின் வசதிக்காக தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் பஸ்களில் WWW.TNSTC.IN என்ற இணையத்தளம் மூலம் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும், அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேற்படி சேவையை வேளாங்கண்ணி செல்லும் பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments