கோட்டைப்பட்டினத்தில் குளக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்




கோட்டைப்பட்டினத்தில் குளக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் தாமரைக்குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் பலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டியதாக புகார் எழுந்தது. மேலும் அப்பகுதியை சேர்ந்தவர் இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

பொக்லைன் மூலம் அகற்றம்

மணமேல்குடி தாசில்தார் ஷேக் அப்துல்லா, மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் அரசமணி உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று தாமரைக்குளம் பகுதிக்கு வந்தனர். அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொழிலாளர்கள் மூலம் மேற்கொண்டனர்.

இதில் குளத்தின் கரையின் ஓரத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments