ராமநாதபுரம்-நயினார்கோவில் இடையே ரூ.48 கோடியில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநில நெடுஞ்சாலை
ராமநாதபுரம்- நயினார்கோவில் இடையே சுமார் 30.2 கிலோ மீட்டர் சாலை மாநில நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த சாலை மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை, மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலை, மதுரை-திருச்சி இடையேயான மேலூர் சாலை ஆகியவற்றை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இருவழிச்சாலையாக உள்ள இந்த மாநில நெடுஞ்சாலை பகுதியில் பெரியகண்மாய் பகுதியில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீர் அழகன்குளம் முகத்துவாரம் பகுதிக்கு சென்றுகடலில் கலந்து வருகிறது. இதுதவிர, ஆயிரம் அடி தத்து எனப்படும் வெள்ள நீர் போக்கியும், தரைமட்ட பாலமும் இந்த சாலையில்தான் உள்ளது.
வெள்ள காலங்களில் இந்த வழியாக திறந்துவிடப்படும் உபரிநீர் தரைமட்ட பாலம் வழியாக வழிந்தோடி கிராமங்களுக்குள் புகுந்து மூழ்கடித்து வந்தது. இந்த பிரச்சினையை கருத்தில் கொண்டு மேற்கண்ட சாலையை மேம்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி மேற்கண்ட ராமநாதபுரம்-நயினார்கோவில் சாலையில் பாலம் அமைய உள்ள பகுதியில் அமைந்துள்ள 5 கி.மீ. சாலை மட்டும் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
ரூ.48 கோடி
இதன்படி ராமநாதபுரத்தில் இருந்து 2-வது கிலோ மீட்டர் முதல் 7-வது கிலோ மீட்டர் வரை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. தற்போது 7 மீட்டராக உள்ள இந்த சாலை இருபுறமும் தலா 7½ மீட்டர் என விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதுதவிர மேற்கண்ட பாதையில் 108 மீட்டருக்கு மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. 30 மீட்டருக்கு சிறிய பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த 2 பாலங்களும் பெருவெள்ள நீர் கடத்தும் வகையில் அமைக்கப்பட்டு ஏறத்தாழ முடிவடைந்துள்ளன.
ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநில அரசின் நிதி உதவியுடன் ரூ.48 கோடியில் மேற்கண்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் காவனூர்-பாண்டியூர் இடையே 12 கி.மீ. தூரத்திற்கு நான்குவழிச்சாலை அமைக்கும் பணி ரூ.60 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.