அறந்தாங்கி,ஆக.25- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
கீரமங்கலம் அருகே, மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024 - 25ம் ஆண்டு பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது.
முன்னதாக பள்ளியின் உதவி தலைமையாசிரியர் பரமசிவம் வரவேற்றார்.
கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் கங்கை அரசன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் துரை கோவிந்தராசு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுதா கிருபாநிதி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் இளமதி, ஓய்வு பெற்ற காவல் உதவி கண்காணிப்பாளர் காதர் மைதீன், பள்ளியின் புரவலர் பா.சிதம்பரம், நேதாஜி இளைஞர் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் செந்தூர பாண்டியன், ராணியம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் சர்வம் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து,
பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம், முக்கியத்துவம் மற்றும் அரசின் கல்வி உதவி திட்டங்கள் குறித்து, தலைமை ஆசிரியர் பெற்றோர்களிடம் கூறினார்.
மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் கடமைகள், அதிகார வரம்புகள், பொறுப்புகள் குறித்தும் பேசினார்.
இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக ராகிணி, துணைத்தலைவராக கவிதா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளாக முகமது மூசா, கவிதா மணி, பல்வேறு மாணவர்களின் பெற்றோர்கள் தேர்வு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக செய்யப்பட்டனர்.
பள்ளி மேலாண்மை குழு புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும்
தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் சான்றுகளும் வழங்கப்பட்டன.
கிராம நிர்வாக அலுவலர் பிரபு, கிராம உதவியாளர் முத்துச்சாமி ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைத்தார்கள்.
இறுதியில் ஆசிரியர் நிர்மலா மனுவேல் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.