மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணமேல்குடி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் ஆகிய இரண்டு ஹைடெக் லேப் மையங்களில் செயல்திறன் மிகு வகுப்பறை மற்றும் கணினி தொழில்நுட்பவியல் சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி திறன் மேம்பாட்டுப் பயிற்சி




மணமேல்குடி  ஒன்றியத்திற்கு உட்பட்ட மணமேல்குடி  அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் ஆகிய இரண்டு ஹைடெக் லேப் மையங்களில் செயல்திறன் மிகு வகுப்பறை மற்றும் கணினி தொழில்நுட்பவியல் சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது. 

இந்நிகழ்வினை மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஜீவானந்தம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி மனோன்மணியம்  வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய  திரு. செழியன் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில்  டக்ஸ் தட்டச்சு , சுவரொட்டி உருவாக்கம்,  Libre office, இம்ப்ரெஸ் ,
 தமிழ் தட்டச்சு, கூகுள் இயக்ககம்,   ஹைடெக் லேப் செயற்கை நுண்ணறிவு  மற்றும்  மணற்கேணி போன்ற தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி  கொடுக்கப்பட்டது.

இப்பயிற்சியில் கருத்தாளர்களாக பட்டதாரி ஆசிரியர்கள் நிரு.ஜெயபால் திரு.சசிகுமார் திரு.அய்யனார் மற்றும் திரு.வீரச்செல்வம்  ஆகியோர் செயல்பட்டனர். 

இப்பயிற்சிக்கான முன்னேற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் 
திரு சசிகுமார் மற்றும் திரு பன்னீர்செல்வம்  செய்திருந்தனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments