தொண்டி பகுதியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை




தொண்டி கடலோரப் பகுதியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகையான சாகர் கவாச் நடைபெற்றது. இதனை ஒட்டி தொண்டி கடற்கரை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில், தனிப்பிரிவு ஏட்டு இளையராஜா, காவலர்கள் சதாம் உசேன், ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் ரோந்து படகில் கடலுக்குள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் படகுகளை சோதனையிட்ட கடலோர காவல் படையினர் அந்தப் படகுகளில் மீனவர்கள் அல்லாத சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் உள்ளனரா என்பதை ஆய்வு செய்தனர். மேலும் தொண்டி பகுதியில் கடலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments