பட்டுக்கோட்டையில் பேக்கரி கடைக்குள் கார் புகுந்தது 2 பேர் காயம்




பட்டுக்கோட்டையில் பேக்கரி கடைக்குள் கார் புகுந்தது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

கடைக்குள் கார் புகுந்தது

பட்டுக்கோட்டை சாமியார் மடம் அண்ணா சிலை அருகே ஸ்வீட்ஸ் பேக்கரி கடை வைத்திருப்பவர் இளையராஜா(வயது40). நேற்று மதியம் 2 மணி அளவில் இந்த பகுதி வழியாக ஒரு பெண் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பேக்கரி கடைக்குள் புகுந்தது. இதனால் கடையில் இருந்த பிஸ்கட், இனிப்பு பொருட்கள், குளிர்பானங்கள் சேதம் அடைந்தன.

கடைக்குள் இருந்த உரிமையாளரின் சகோதரர் சதீஷ்குமார்(வயது43) மயிரிழையில் உயிர் தப்பினார். பேக்கரி கடை அருகில் நின்று கொண்டிருந்த பட்டுக்கோட்டை ராஜப்பா நகரை சேர்ந்த ராமனுக்கு(67) காலில் காயம் ஏற்பட்டது. மேலும் பாக்கியம் நகரை சேர்ந்த சேகருக்கு(47) இடுப்பு பகுதியில் அடிபட்டது.

சிகிச்சை

காயமடைந்த இருவரும் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். போக்குவரத்து நிறைந்த பகுதியில் ஒரு கார் திடீரென பேக்கரி கடைக்குள் புகுந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments