பல இடங்களில் பெயர்ந்துள்ளன: வாகன ஓட்டிகளை பீதிக்குள்ளாக்கும் கிழக்கு கடற்கரை சாலை




கிழக்கு கடற்கரை சாலை பெயர்ந்து பள்ளமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலை

ராமநாதபுரத்தில் இருந்து தினமும் நாகப்பட்டினம், தொண்டி, பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி, தஞ்சாவூர், அறந்தாங்கி உள்ளிட்ட பல ஊர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ராமநாதபுரத்தில் இருந்து இந்த ஊர்களுக்கு புறப்படும் அரசு பஸ்கள் தேவிபட்டினம் சென்று அங்கிருந்து திருப்பாலைக்குடி, உப்பூர், தொண்டி வழியாக தான் செல்கின்றன.

ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்த நிலையில் பள்ளம் விழுந்து காட்சியளிக்கின்றது. குறிப்பாக தேவிபட்டினத்தில் இருந்து திருப்பாலைக்குடி, உப்பூர், தொண்டி இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் பல இடங்களில் சாலை பெயர்ந்து பள்ளங்களாக காணப்படுகின்றன.

வாகன ஓட்டிகள் பீதி

இந்த சாலை வழியாக தான் தினமும் ஏராளமான அரசு பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்கின்றன. கிழக்கு கடற்கரை சாலையில் ஆங்காங்கே சாலை பெயர்ந்து பள்ளமாக காட்சியளிக்கின்றன. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் திடீர் பள்ளத்தை பார்த்ததும் திடீரென்று பிரேக் போட்டு வாகனத்தை நிறுத்த முயற்சிக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன.

இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பீதிக்குள்ளாகின்றன.

எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தேவிபட்டினம்-தொண்டி இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments