முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் விவரம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப். 10-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன.

பள்ளிகளுக்கான பிரிவில் செப்.10-ஆம் தேதி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் கூடைப்பந்து, சிலம்பம், நீச்சல், வளைகோல்பந்து, மற்றும் மாணவா்களுக்கு வாலிபால் போட்டியும் நடைபெறுகின்றன.

மௌண்ட் சீயோன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான மேசைப்பந்து, கேரம் போட்டிகளும், ஸ்ரீ பிரகதம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான கோ-கோ போட்டிகளும் நடைபெறவுள்ளன.

செப்.11-ஆம் தேதி மாவட்ட உள் விளையாட்டரங்கத்தில் மாணவ, மாணவிகளுக்கு இறகுப் பந்து போட்டி நடைபெறுகிறது. செப். 12-ஆம் தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் மாணவ, மாணவிகளுக்கு தடகளம் மற்றும் கைப்பந்து போட்டிகளும், வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான வாலிபால் போட்டியும், மௌண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளியில் சதுரங்கப் போட்டிகளும், மன்னா் கல்லூரியில் மாணவா்களுக்கான கால்பந்து, மாணவ, மாணவிகளுக்கான கபாடி போட்டியும் நடைபெறவுள்ளன.

செப். 13-ஆம் தேதி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு கால்பந்து போட்டியும், செப். 17-ஆம் தேதி மன்னா் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான கிரிக்கெட் போட்டியும் நடைபெறுகிறது.

கல்லூரிப் பிரிவுக்கு செப்.13-ஆம் தேதி மாவட்ட உள் விளையாட்டரங்கத்தில் மாணவ, மாணவிகளுக்கான இறகுப் பந்து போட்டியும், செப். 17-ஆம் தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் வாலிபால், கூடைப்பந்து, சிலம்பம், நீச்சல், வளைகோல்பந்து, சதுரங்கப் போட்டிகளும் நடைபெறவுள்ளன.

செப். 18-ஆம் தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகளும், மௌண்ட் சீயோன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான மேசைப்பந்து, கேரம் போட்டிகளும். மன்னா் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான கால்பந்து போட்டியும் நடைபெறவுள்ளது.

செப். 19-ஆம் தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டியும், செப். 21-ஆம் தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் மாணவ, மாணவிகளுக்கான கபாடி, கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறுகின்றன.

அரசு ஊழியா்களுக்கான பிரிவுக்கு செப். 20-ஆம் தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபாடி, தடகளம், இறகுப்பந்து, கையுந்து பந்து, சதுரங்கப் போட்டிகளும் நடைபெறுகின்றன. மௌண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளியில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கேரம் போட்டி நடைபெறவுள்ளது.

பொது மக்களுக்கான பிரிவுக்கு செப். 23-ஆம் தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகளம், வாலிபால், சிலம்பம், இறகுப்பந்து, கபாடி, கால்பந்து போட்டிகளும், மௌண்ட் சீயோன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கேரம் போட்டிகளும், செப். 24-ஆம் தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் செப். 24-ஆம் தேதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடகளம், இறகுபந்து, அடாப்டட் வாலிபால், எறிபந்து மற்றும் கபாடிப் போட்டியும் நடைபெறவுள்ளது.

மண்டல அளவிலான பளு தூக்குதல் போட்டி செப். 13-ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், செப். 14-ஆம் தேதி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் கலைஞா் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ, 74017 03498, 04322 222187 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments