ஆவுடையார் கோவிலில் விபத்தில் இறந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம் அரசு மரியாதையுடன் தகனம்




ஆவுடையார் கோவில் தாலுகா மற்றும், கிராமம் மேலவீதியைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் மாணிக்க வாசகம் (22), இவர் வாகனவிபத்தில் (12ந் தேதி) அன்று சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே செல்லும்போது நடந்த விபத்தில் பலத்த காயத்துடன் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்சிகிச்சை பலனின்றி(14ந் தேதி ல்இறந்துவிட்டார். இறந்தவரின் உடல்உறுப்புகள் இரண்டு கிட்னிகள், இரண்டு கண்கள்,இதயம்,கல்லீரல் போன்ற முக்கிய உடல் உறுப்புகள் மருத்துவமனையில் பெற்றோரின் அனுமதியுடன் தானம் செய்யப்பட்டு. நேற்று மாலை மாலை 5.00 மணியளவில் துணை ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ஸ்ரீதர் தலைமையில் ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங், துணை வட்டாட்சியர் சக்கரபாண்டியன், சரக வருவாய் ஆய்வாளர் போத்திராஜ், கிராம நிர்வாக அலுவலர் சாலமோன், இமானுவேல் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர்கலந்து கொண்டு அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டுஇறந்தவரின் உடல்தகனம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சிஆவுடையார் கோவில் பகுதியில் கேட்போரை கண் கலங்க வைத்துள்ளது. விபத்தில் இறந்த மாணிக்கவாசகத்திற்கு அகல்யா (20) என்ற மனைவியும் 9 மாதங்களான நிஷாந்த் என்ற மகனும் உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments