செங்கீரை ஊராட்சியை பிரிப்பதற்கு எதிர்ப்பு: ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க பொதுமக்கள் வந்ததால் பரபரப்பு




செங்கீரை ஊராட்சியை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதார் அட்டை, ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கீரை ஊராட்சியை பிரிப்பதற்கு எதிர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள செங்கீரை ஊராட்சியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் செங்கீரை ஊராட்சியின் சில பகுதிகளை பிரித்து ஆயிங்குடி மற்றும் ராயவரம் ஆகிய ஊராட்சிகளுடன் இணைக்கப்படுவதற்கு செங்கீரை ஊராட்சி பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் செங்கீரை ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவதற்காக வந்தனர்.

தள்ளுமுள்ளு

பின்னர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தாரிடம் ஆதார்-ரேஷன் கார்டுகளை பொதுமக்கள் ஒப்படைக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்திய போது. வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை தாசில்தார் அலுவலகத்தின் வளாகத்தில் வீசிவிட்டு சென்றனர். இதனால் தாசில்தார் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments