கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் தண்ணீர் விரைவில் வெளியேற்றம் ஜமாத் அறிவிப்பு




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுக்கா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் இரு கண்களாக  இரண்டு குளங்கள்  உள்ளன. நெடுங்குளம் மற்றும் காட்டுக்குளம் இந்த இரண்டு குளங்களும் மக்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது நெடுங்குளதிற்கு புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மூலம் விரைவாக தண்ணீர் நிரப்பப்பட்டு  வருகிறது. அதை தொடர்ந்து காட்டுக்குளம் பகுதி பொதுமக்களின்  பயன்பாட்டு வசதிக்காக காட்டு குளத்தில் உள்ள  தண்ணீர் சில நாட்களில் வெளியேற்றப்படும் என்று ஜமாஅத் நிர்வாகம் அறிவித்துள்ளார்கள். மேலும்  தண்ணீர் வெளியேற்றப்பட்ட உடன் தக்க பராமரிப்பு செய்து சின்னப் பள்ளிவாசல் அருகில் உள்ள பழைய  ஆழ்துளை கிணற்றை மறுசீரமைப்பு செய்து சோலார் மின்சாரம் மூலம் மோட்டார் அமைத்து    காட்டுக் குளத்திற்கும் நீர் ஆதாரம் மேம்படுத்தப் பட உள்ளது  . என்பதையும் இதற்கான நீர் நிலைகள் பராமரிப்பு கமிட்டியாளர்கள் கீழ்கண்ட  ஐந்து நபர்கள் தொடர்ந்து செயல்படுவார்கள் என்பதையும்.

1.RSM முகம்மது அன்சாரி
2.J. முகம்மது யூசுப்
3 முகம்மது மீராசா
4.ராஜா முகம்மது
5.சேக்காதி ராவுத்தர்

நெடுங்குளத்திற்கு வசூல் செய்யப்பட்ட வகையில் போதிய நிதி இருப்பதால் அந்த நிதியிலிருந்து நமது காட்டுக்குளத்திற்கும் விரைவில்  ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் விடப்படும் என ஜமாத் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments