கூத்தாநல்லூரில் சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பாதுகாவலர்கள் மீது வழக்குப்பதிவு-வாகனங்கள் பறிமுதல்





திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பாதுகாவலர்கள் மீது வழக்குப்பதிவு-வாகனங்கள் பறிமுதல் செய்தனர் 

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் 18 வயதிற்கு உட்பட்ட பள்ளிக்கு செல்லும் சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும், மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில், திருவாரூர் உட்கோட்டம், கூத்தாநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 18 வயதிற்கு உட்பட்ட பள்ளிக்கு செல்லும் சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்தாக 1.கூத்தாநல்லூர், ஆஸ்பத்திரி ரோடு பகுதியை சேர்ந்த தமீம் ஷா மகன் முகமது இலியாஸ் (வயது-58), 2.பொதக்குடி, சத்குரு தெருவை சேர்ந்த நூருல் ஹமீது மகன் முகமது நசுருதீன் (வயது-31) ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2-இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிப்பது சட்டப்படி குற்றம். மீறும் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments