இராமநாதபுரம் மாவட்டம்
கீழக்கரையில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர் கேடு..
பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம் எல் ஏவிடம் புகார் அளித்தனர்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வந்த எம் எல் ஏவிடம் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக கூறிய புகாரில்
கீழக்கரையில் குப்பைகள் அதிகம் தேங்கி கிடக்கிறது இதனால் நோய் தொற்று ஏற்படும் சூழல் கீழக்கரையில் உருவாகி வருகிறது 91 நபர்கள் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று நகராட்சி சார்பாக கூறப்படுகிறது ஆனால் வேலைகளில் அதிக அளவு தொய்வு குறைவான நபர்களை பணியில் வேலை செய்வது போல் தெரிகிறது குப்பை தொட்டிகளும் , ஹைட்ராலிக் வண்டியும் சரி செய்யப்படாமல் ஊர் முழுவதும் குப்பைகள் ஆங்காங்கே பரவி துர்நாற்றம் அடித்து நோய் தொற்று ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது விரைந்து கீழக்கரையை சுகாதார சீர்கெட்டில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் இரண்டு மூன்று நாட்களில் தூய்மை பணியாளர்களை அதிகப்படுத்தி பணிகளை சரி செய்து குப்பை தொட்டிகள் வைக்கப்படும் என்கின்ற வாக்குறுதியை பொதுமக்கள் கூட்டமைப்பிற்கு சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் வாக்குறுதி அளித்தார்
அதேபோல் ஆதில் கோழிக்கடையில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை இருக்கக்கூடிய ரோடுகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது மின் கம்பங்களில் விளக்குகளும் இல்லாமல் இருக்கிறது அதிக அளவு பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பாதை கல்லூரி மாணவர்கள் வேலைக்கு வரக்கூடிய பெண்கள் இரவு நேரங்களில் பயன்படுத்தக்கூடிய பாதை பிரதான சாலை என்பதால் விரைந்து ரோடுகள் போடும் பணி அமைத்து தர வேண்டும் என்கின்ற கோரிக்கையை வைத்தோம் நிச்சயம் ரோடுகள் போடப்படும் அதற்குண்டான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கின்ற வாக்குறுதியை அளித்துள்ளார்
டிஎஸ்பி அலுவலகம் பக்கத்தில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது தில்லையேந்தல் பஞ்சாயத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள் ரோடுகள் போடும் பணியை கூடிய விரைவில் செயல்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம் துறை சார்ந்தவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்கள் டெண்டர் எடுத்தவர்கள் காலதாமதம் ஆனால் அதை ரத்து செய்து உடனடியாக அந்தப் பணியை நிறைவு படுத்தி தரப்படும் என்கின்ற வாக்குறுதியை அளித்துள்ளார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.