ஹஜ் விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு




இந்தியாவில் இருந்து 2025 ஆம் ஆண்டு இந்தியன் ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ் செல்ல விரும்புபவர்கள் விண்ணப்பம் செய்வதற்குண்டான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 23-8-2024 நள்ளிரவு 11.59 மணிவரை விண்ணப்பம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கபட்டிருந்தது.
இந்நிலையில் அதிகமானோர் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருவதால், விண்ணப்பம் செய்வதற்குண்டாக இறுதி நாள் 30-09-2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்பவர்கள் குறைந்த பட்சம் 15-01-2026 வரை செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) ஐபோன் (அல்லது) ஆண்ட்ராய்டு கைபேசியில் “HAJ SUVIDHA” செயலியினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments