சிறுமருதூர் ஊராட்சியில் சமூக தீமை நிராகரிப்பு உறுதி மொழி ஏற்பு




ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், சிறுமருதூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அருணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினர்களால் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறையின் சார்பில், விவசாயிகளுக்கு பழச்செடி தொகுப்பு, ஊட்டச்சத்து தொகுப்பு, மண்புழு உரப்படுகை உள்ளிட்ட வேளாண் தொகுப்புகளை வழங்கினார். பின்னர், தூய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இதையடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு உறுதி மொழியை கலெக்டர் அருணா வாசிக்க, அதனை பின்தொடர்ந்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், அறந்தாங்கி ஆர்.டி.ஓ. சிவக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜநாயகம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சீனிவாசன், ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீவா, சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம், ஒன்றிய குழு உறுப்பினர் கருப்பூர் செந்தில்குமரன், ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாகரன், வீரையன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments