தொண்டி அருகே உள்ள சோழியக்குடி கடல் பகுதியில் சேதமடைந்துள்ள ஜெட்டி பாலத்தை சீரமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொண்டி அருகே உள்ள சோழியக்குடியில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் ஆயித்திற்க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இக்கடலில் சிறிய ஜெட்டி பாலம் மீனவர்கள் நலன் கருதி கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மூலம்தான் மீனவர்கள் வலைகள் உள்ளிட்ட பொருள்களை படகுகளில் ஏற்றுவதும் மீன் பிடித்து திரும்பி வந்து மீன் உள்ளிட்ட பொருள்களை இறக்குவதும் நடைபெற்று வருகிறது. பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் பாலத்தின் நடுவில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. இது மீனவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் சரக்குகளை கொண்டு செல்ல அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறியது, இந்த பாலம் படகுகளை கடல் பகுதியில் நிறுத்தி சரக்குகளை ஏற்ற இறக்க வசதியாக உள்ளது. இல்லையென்றால் தலைசுமையாக தூக்கி செல்ல வேண்டும். தற்போது பாலத்தின் நடுவில் பெரிய ஒட்டை விழுந்துள்ளது. இரவு நேரத்தில் அடிக்கடி தவறி விழுந்து விடுகின்றனர்.
அதனால் தற்போது பலகை கொண்டு அடைத்துள்ளோம். மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம். பாலத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.