ஆயுதபூஜையையொட்டி புதுக்கோட்டை வழியாக செல்லும் சிறப்பு ரெயிலில் டிக்கெட் முன்பதிவுக்கு பயணிகள் ஆர்வம்




ஆயுதபூஜை வருகிற 11-ந் தேதியும், 12-ந் தேதி விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வது உண்டு. பயணிகள் வசதிக்காக தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் சென்னை சென்டிரலில் இருந்து புதுக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு வருகிற 8-ந்தேதியும், மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து வருகிற 9-ந் தேதியும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 8-ந் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு மறுநாள் காலை 8.58 மணிக்கு வந்து காலை 9 மணிக்கு புறப்படும். தூத்துக்குடிக்கு மதியம் 1.50 மணிக்கு சென்றடையும். இதேபோல் மறுமார்க்கத்தில் 9-ந் தேதி மாலை 4.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு புதுக்கோட்டைக்கு இரவு 9.03 மணிக்கு வந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும். சென்னை சென்டிரலுக்கு மறுநாள் காலை 8.55 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நேற்று காலையில் தொடங்கியது. இதில் சென்னையில் இருந்து புதுக்கோட்டை வருவதற்கு பயணிகள் ஆர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இதில் நேற்று மாலை நேர நிலவரப்படி சென்னை-புதுக்கோட்டைக்கு முன்பதிவு படுக்கையில் 124 டிக்கெட்டுகள் முன்பதிவாகியிருந்தன. மேலும் இருக்கைகள் காலியாக உள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments