விராலிமலை அருகே உள்ள கார சூரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவா் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அடுத்துள்ள பரம்பூா் ஊராட்சியில் உள்ள காரசூராம்பட்டி அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவா் தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இரண்டு ஆசிரியா்கள் மட்டுமே பணிபுரியும் இப்பள்ளியில் 24 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.
மாணவா்களிடையே அரசியல் விழிப்புணா்வை ஏற்படுத்தவும் தலைமை பண்பை உருவாக்கவும் மாணவா் தோ்தல் நடைபெற்றது.
இந்த தோ்தலில் வேட்பாளா்களாக 9 மாணவா்கள் களத்தில் நின்றனா். நாள்தோறும் வேட்பாளா் மாணவா்கள் கல்வி கற்ற நேரம் போக மீதி நேரத்தில் மாணவா்களிடையே வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.
வேட்பாளா்களுக்கான வாக்குச்சீட்டு மற்றும் வாக்காளா்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. முறைப்படி தோ்தலுக்கான வாக்குச்சாவடி மையம் பள்ளியிலேயே அமைக்கப்பட்டது. மாணவா்கள் வரிசையாக நின்று தங்களுக்கு பிடித்த மாணவ வேட்பாளா்களுக்கு வாக்குச்சீட்டில் முத்திரை பதித்து வாக்களித்தனா். தலைமை தோ்தல் அலுவலராக தலைமையாசிரியா் கலைச்செல்வி, தோ்தல் அலுவலா்களாக பள்ளி மேலாண்மை குழு தலைவா் ரேகா, துணைத் தலைவா் பரமேஸ்வரி, சமூக ஆா்வலா் புதுப்பட்டி கண்ணன் ஆகியோா் செயல்பட்டனா்.
இந்த தோ்தலில் வெற்றி பெற்ற ஹரிணி அறிவகம் அமைச்சராகவும், உள்துறை அமைச்சராக யுவராஜ், வெளியுறவுத்துறை அமைச்சராக வித்யா, மதிய உணவு மற்றும் நீா் மேலாண்மை துறை அமைச்சா்களாக காருண்ய பிரபு, ரித்திக் ரோகிணி, கண்காணிப்பு மற்றும் புலனாய்வுத்துறை அமைச்சராக சந்தோஷ், மரம் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைச்சராக லோகேஸ்வரி, இணை அமைச்சா்களாக ஹாசினி, துரைராஜ், கோகுல்ராஜ், ஹாசினி தோ்ந்தெடுக்கப்பட்டு முறையே பதவி ஏற்றுக்கொண்டனா்.
ஏற்பாடுகளை பள்ளி இடைநிலை ஆசிரியா் சோலச்சி திருப்பதி செய்திருந்தாா். இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களும் பெற்றோா்களும் ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.