ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவி, கணவர் கைது




சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் காளீசுவரன்(வயது 45). இவர் அதே பகுதியில் புதிய வீடு கட்டி உள்ளார். இந்த புதிய வீட்டிற்கு தீர்வை ரசீது பெற காளையார்கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அனுமதி கோரினார். அதற்கு ஊராட்சி மன்ற தலைவி ஜோஸ்மின்மேரி, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத காளீசுவரன் இது தொடர்பாக சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினர். இந்த பணத்தை கொடுப்பதற்காக காளீசுவரன் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் அங்கு ஊராட்சி மன்ற தலைவி ஜோஸ்பின்மேரி இல்லை. அவர் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். அவருடைய கணவர் அருள்ராஜ் அலுவலகத்தில் இருந்தார். அருள்ராஜ் இதுகுறித்து தனது மனைவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். பின்னர் காளீசுவரனிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை பெற்றபோது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜான் பிரிட்டோ மற்றும் போலீசார், அருள்ராஜை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும், அரசு விழாவில் பங்கேற்க சென்ற ஊராட்சி மன்ற தலைவி ஜோஸ்பின் மேரியையும் வரவழைத்து அவரையும் கைது செய்தனர். அதேபோல ஊராட்சி மன்ற அலுவலக தற்காலிக உதவியாளர் குமார் என்பவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments