தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமேசுவரத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார்.
சிறப்பு ரெயில்கள்
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணை தலைவருமான கே.நவாஸ்கனி, தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் பலரும் வெளி மாநிலங்களிலும், பல்வேறு மாவட்டங்களிலும் பணிபுரிவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல ஏதுவாக சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில் வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் எளிதில் சொந்த ஊருக்கு வந்து திரும்பும் வகையிலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் கீழ்க்கண்ட ரெயில்களை சிறப்பு ரெயிலாக இயக்குவதற்கு ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடுதல் பெட்டிகள்
சென்னை-ராமேசுவரம் இரு மார்க்கமும் விருத்தாச்சலம் வழியாக இரவு நேர விரைவு ரெயில், கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி திண்டுக்கல் வழியாகவும், பெங்களுருவிலிருந்து கோவை, நாமக்கல், கருர், திண்டுக்கல் வழியாகவும், கன்னியாகுமரியிலிருந்து ராமேசுவரம்-பாலக்காடு,, ராமேசுவரம்-சேலத்திலிருந்து ஈரோடு, திருப்பூர், கோவை, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாகவும், ஐதராபாத்-ராமேசுவரம் உள்ளிட்ட வழித்தடங்களில் இரு மார்க்கமும் சிறப்பு ரெயில்களை இயக்கிட வேண்டும். மேலும் சென்னையில் இருந்து ராமேசுவரத்திற்கு இயக்கப்படும் விரைவு ரெயில்களில் கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.