அறந்தாங்கியில் சட்ட விழிப்புணர்வு முகாம்




தேசிய மகளிர் ஆணையமும், புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையமும் இணைந்து பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம் அறந்தாங்கி தாலுகா மேலப்பட்டு ஊராட்சியில் நடத்தியது. முகாமிற்கு புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவின் மூத்த வக்கீல் பாண்டி செல்வி மற்றும் வக்கீல் அஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் பற்றி விரிவாக பொதுமக்களிடம் எடுத்துக் கூறினர். மேலும் பாண்டி செல்வி பேசுகையில், சமுதாயத்தில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். தவறு செய்தால் தண்டிக்கப்படுவார்கள் என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும். ஒரு பெண் கல்வி பெற்றால் அந்த குடும்பத்திற்கே கல்வி அறிவு கிடைக்கும். ஒரு பெண்ணை மட்டுமல்லாமல் ஒரு ஆணையும் சரியான விதத்தில் வளர்த்தால் சமுதாயத்தில் தவறு நடக்காமல் அனைவரையும் பாதுகாக்க முடியும். பெரும்பாலும் குடும்பத்தில் பிரச்சினைக்கு காரணமாக அமைவது என்னவென்றால் செல்போன் பயன்படுத்துவதாலும் பெண்ணை பெற்ற தாய், தன் பெண்ணிற்கு ஆதரவாக பேசுவதாலும், ஒரு பெண் தன் வாழ்க்கையை இழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. குழந்தை திருமண தடைச் சட்டங்கள், சொத்து பங்குரிமை சட்டம் பற்றியும் பொதுமக்களிடம் விளக்கி கூறினார். மேலும் பெரும்பாலும் போக்சோ வழக்குகளில் தவறு செய்துவிட்டு குற்றவாளிகளாக முதியோர்களும், இளைஞர்களும் அதிகமாக நீதிமன்ற விசாரணைக்கு வருகின்றனர். இதனால் அவர்கள் செய்யும் தவறிற்கு சிறை தண்டனையை பெற்று வாழ்க்கையும் இழந்து விடுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் வாழ்க்கையை இழந்து விடுகிறார். உண்மையிலேயே தவறு செய்யும் பட்சத்தில் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்றார். முகாமில் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments