திருச்சி-காரைக்குடி டெமு ரெயில் பெட்டிகள் மாற்றம்




திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் காரைக்குடியில் இருந்து விருதுநகர் வரையும் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் இருந்தும் காரைக்குடி வந்தும், அங்கிருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு டெமு ரெயில் இயக்கப்படுகிறது. வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ரெயிலில் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தரெயில் பெட்டிகளில் ஐ.சி.எப். பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. திருச்சி-காரைக்குடி டெமு ரெயில் பெட்டிகள் நேற்று முதல் மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து காரைக்குடி- திருச்சி டெமு ரெயில் பெட்டிகள் இன்று (வியாழக்கிழமை) முதல் ஐ.சி.எப். பெட்டிகளாக மாற்றப்படுகிறது. ஐ.சி.எப். பெட்டிகள் என்பது பயணிகள் ரெயில்களில் இயக்கப்படும் பெட்டிகளை போல காணப்படும். ரெயில் பெட்டிகளில் பயணிகள் இருக்கை சற்று அகலமாகவும், இட வசதியும் அதிகமாக இருக்கும். டெமு ரெயில் பெட்டிகள் மாற்றப்பட்டது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரத்தில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் திருச்சி-காரைக்குடி ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments