புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வரும் 26-ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.
புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில், மாநிலம் முழுவதும் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட பிரபல தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.
இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் மு. அருணா தலைமையில் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவது, சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது, பேருந்து வசதிகள் செய்வது, பாதுகாப்பு வசதிகள் செய்வது போன்றவை தொடா்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்கள் மோ. மணிகண்டன், பெ. வேல்முருகன், மாவட்டத் தொழில் மையப் பொதுமேலாளா் சு. திரிபுரசுந்தரி, மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க. பிரேமலதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், ‘தாட்கோ’ மேலாளா் எல். அனிட் லிமலின் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.