நவாஸ்கனி எம்.பி. சொந்த நிதியில் 700 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை




நவாஸ்கனி எம்.பி. சொந்த நிதியில் 700 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

கல்வி உதவித்தொகை

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் நவாஸ்கனி எம்.பி.யின் சொந்த நிதியிலிருந்து கடந்த 5 ஆண்டுகளாக உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார். இதன் தொடர்ச்சியாக 6-வது ஆண்டாக கூடுதல் மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்ததால் 700 -க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று ராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள யாபா மகாலில் நடந்தது. நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ. 1 கோடியே 26 லட்சம் மதிப்பிலான உயர்கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

எம்.பி., எம்.எல்.ஏ. பங்கேற்பு

இந்த விழாவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். இதில் ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கலந்து கொண்டு நவாஸ்கனி எம்.பி. கடந்த 6 ஆண்டுகளாக மாணவர்கள் நலன் கருதி கல்வி உதவித் தொகை வழங்குவதை பாராட்டினர்.

.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொது செயலாளர் கே.ஏ.எம் முகம்மது அபுபக்கர், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான், எஸ்.டி.குழும சேர்மன் டாக்டர் கே.அன்சாரி, ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் செல்லதுரை அப்துல்லா. நகராட்சி துணை தலைவர் பிரவீன் தங்கம், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி, த.மு.மு.க மாநில துணை பொதுச்செயலாளர் முகவை சலிமுல்லாகான், மாநில விவசாய அணி துணை செயலாளர் முன்னாள் டி.ஆர்.ஓ.குணசேகரன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வழுதூர் பி.டி. ராஜா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஜமாத் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் உள்ளிட்ட பிரமுகர்கள் ஒன்றிணைந்து மாணவர்களுக்கான உதவித்தொகைகளை வழங்கி பாராட்டினார்கள்.முடிவில் எஸ்டி கூரியர் குழும தலைவர் டாக்டர் அன்சாரி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை எம்.பி.நேர்முக உதவியாளர் அரபாத், அலுவலக உதவியாளர் அப்துல் ஜப்பார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments