ஆவுடையார்கோவில் அருகே சக்கர கல் கண்டெடுப்பு




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவரும், தொல்லியல் வரலாற்று கல்வெட்டு ஆய்வாளருமான காளிதாஸ், தொல்லியல் ஆர்வலர்கள் சிவசக்தி, ராம் லட்சுமன், நவீன் குமார், ஜியாவுதீன் ஆகியோர் கொண்ட வரலாற்று ஆய்வுக்குழுவினர் ஆவுடையார்கோவில் வட்டம் சாட்டியக்குடி பஞ்சாயத்து இண்டனூர் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இவ்வூர் கண்மாய்க்கரையில் உள்ள முனிக்கோவில் அருகே "எண்தம்ம பாத சக்கர கல்"லினை கண்டெடுத்தார்கள். இது பற்றி அவர்கள் கூறியதாவது, "இவ்வூரில் பொ.ஊ.ஆண்டு 863 - 910 வாக்கில் பவுத்த மதம் இருந்துள்ளது. இங்கு பவுத்த பிக்குகள் தங்கி மக்களுக்கு அறச்சேவை செய்துள்ளனர். அருகில் உள்ள ஊர் சாக்கிய குடி (பவுத்தர்குடி) இன்று மக்களால் இவ்வூர் சாட்டியக் குடி என்று அழைக்கப்படுகிறது. எழுநூற்றுமங்கலம், உலகாயம்தனி போன்ற இடங்களில் பவுத்தம் சிறப்போடு இருந்துள்ளது தெரியவருகிறது. இத்தொல்லியல் இடங்களை பாதுகாப்பது மக்களுடைய கடமை'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments