புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் ரூ.5.89 லட்சத்தை மோசடி செய்ததாக வருவாய் ஆய்வாளா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியின் சில இடங்களில் கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்கான களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, வேளாண் துறையினா் அறிக்கை அனுப்பி வைத்தனா். இதன்படி, அரசிடமிருந்து வரப்பெற்ற நிவாரணத் தொகைகளை விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பி வைத்தனா்.
இதில், சிலருக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடா்ந்து நிவாரணத் தொகை வழங்கப்பட்ட பட்டியலை வைத்து விவசாயிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
இந்த விசாரணையின் முடிவில், 19 விவசாயிகளுக்கான தொகை ரூ. 5.89 லட்சத்தை, வருவாய் ஆய்வாளா் மு. மதன் என்பவா் தனது வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மணமேல்குடி காவல் நிலையத்தில் வட்டாட்சியா் நா.சேக் அப்துல்லா புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், மதன் மீது மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தற்போது தலைமறைவாக உள்ள மதனைப் போலீஸாா் தேடி வருகின்றனா். இதற்கிடையே விவசாயிகளின் நிவாரணத் தொகையில் மோசடி செய்த மதன் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.