கலைஞர்களுக்கு மாவட்ட கலைமன்ற விருதுகள் மற்றும் காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்




புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், கலைஞர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.10.2024) மாவட்ட கலைமன்ற விருதுகள் மற்றும் காசோலைகளை வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், கலைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், கலை பண்பாட்டுத் துறையின் சார்பில், மாவட்டங்கள் தோறும் கலைஞர்களுக்கு அகவை மற்றும் கலைப் புலமையின் அடிப்படையில் மாவட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றை தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 கலைஞர்களுக்கு மாவட்ட விருதுகள் மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 2023 - 2024 ஆம் ஆண்டுக்கு தவில், ஓவியம், சிலம்பம், நாதஸ்வரம், கிராமிய நடனம், குரலிசை, நாடகம், பரதநாட்டியம், தேவாரம், கிராமிய பாடகி உள்ளிட்ட கலை பிரிவுகளில், 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு கலை இளமணி விருது மற்றும் ரூ.4,000 -க்கான காசோலையும், 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு கலை வளர்மணி விருது மற்றும் ரூ.6,000 -க்கான காசோலையும், 35 முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு கலைச் சுடர்மனி விருது மற்றும் ரூ.10,000 க்கான காசோலையும், 51 முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு கலை நன்மணி விருது மற்றும் ரூ.15,000 -க்கான காசோலையும், 66 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கலை முதுமணி விருது மற்றும் ரூ.20,000 -க்கான காசோலையும் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த விருதுகளைப் பெற்றுக்கொண்ட கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (கலை பண்பாட்டுத் துறை) திரு.செந்தில்குமார், கலைஞர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments