மணமேல்குடி அன்னை கதீஜா மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம்




மணமேல்குடி தாலுகா கண்டனிவயல் பகுதியில் அன்னை கதீஜா கலை, அறிவியல் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் இடையாத்திமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது. முகாமில் சாலையோர புதர்களை அகற்றுதல், உயர்நிலைப் பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குதல், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவ முகாம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் அகற்றுதல், பொது நூலக வளாகம் தூய்மைப்படுத்துதல் ஆகிய களப்பணிகள் நடைபெற்றன. விழா நிறைவு நாளன்று மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் மோகன், பாக்கியம், வட்டார வள மைய பொறுப்பாளர் சிவயோகம், ஊரக உதவி திட்ட கணக்கர் மாறன், ஊராட்சி மன்ற தலைவர் இளஞ்சியம், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments