புதுக்கோட்டையில் களைகட்டிய ஆட்டுச்சந்தை ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை




புதுக்கோட்டையில் ஆட்டுச்சந்தை களை கட்டியது. ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

ஆட்டுச்சந்தை

புதுக்கோட்டை சந்தைபேட்டையில் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் பண்டிகை காலங்களில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெறும். ஆடுகளை வாங்கி விற்பவர்கள், ஆடுகளை வளர்க்கும் விவசாயிகள், இறைச்சிக்கடை வியாபாரிகள் வந்து ஆடுகளை மொத்தமாக வாங்கி செல்வார்கள்.

இந்த நிலையில் வருகிற 31-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இறைச்சிக்கடைகளில் ஆட்டிறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற ஆட்டுச்சந்தை களைகட்டியது.

ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ஆடுகளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் சரக்கு வேன், லாரிகளில் கொண்டு வந்திருந்தனர். இதேபோல் வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்தனர். வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் அதன் தன்மைக்கு தகுந்தாற்போல் விற்பனையானது. கடந்த வாரத்தில் ஆடுகள் விற்பனை விலையை விட இந்த வாரம் விலை சற்று அதிகரித்திருந்தது.

ஒரு ஆட்டின் விலை குறைந்தது ரூ.8 ஆயிரம் முதல் விற்பனையானது. வியாபாரிகளும் ஆடுகளை போட்டிப்போட்டு வாங்கி சென்றனர். புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments