புதுக்கோட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினர்




புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். முகாமில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கான பணியாளர்களை தேர்வு செய்தனர். முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 1,736 வேலைநாடுனர்கள் பங்கேற்றதில், தகுதியான 9 மாற்றுத்திறனாளிகள் உள்பட 414 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர். முன்னதாக நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments