புன்னகையின் பசுமை தீபாவளி முன்னிட்டு பனைவிதை குறுங்காடு மற்றும் மரம் நடுதல்




தமிழ்நாடு வனத்துறை புதுக்கோட்டை வனக்கோட்டம் மற்றும்  அமரடக்கி புன்னகை அறக்கட்டளை ஆமாஞ்சி ஊராட்சி நிர்வாகம் இணைந்து 5000  ஆயிரம் பனைவிதைகள் குறுங்காடு,   50 மரகன்று நடும் பணி நடைபெற்றது,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி -ஒன்றியம், ஆமாஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் திரு. ரவிச்சந்திரன்  தலைமையில், புன்னகை அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ஆ.சே. கலைபிரபு , முன்னிலையில், அறந்தாங்கி வனச்சரக அலுவலர்  மணிவெங்கடேஷ் அவர்கள் பனை விதை,மரகன்று நடும் பணியினை தொடங்கி வைத்தார் ,

சமத்துவபுரம் கிராமத்தில் -5, ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில் பனைகுறுங்காடு மற்றும் ஏரி கரை இருகரையிலும் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது, கோவில் வாளகத்தில் மரகன்று நடவு செய்யப்பட்டது இதில்  தமிழக வனத்துறை அதிகாரிகள், மற்றும் புன்னகை அறக்கட்டளை அறங்காவலர்  நீலகண்டன்  அடிந்தாங்கி ஒன்றிய தலைவர் திரு. வடிவிஸ்வரன்.  திரு.திரு. ஹரிகுமார் மற்றும் 100 நாள் பணியாளார்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நடவு செய்தனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments