தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் வாங்க பயணம் செய்வதில் அரசு டவுன் பஸ்களில் கட்டணமில்லா டிக்கெட்டால் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான பொருட்கள் வாங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமப்பகுதிகளில் இருந்து நகரப்பகுதிக்கு பொதுமக்கள் அதிகமாக வருகை தருகின்றனர். மாவட்டத்தின் தலைமையிடமான டவுன் பகுதியில் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நகரின் மையப்பகுதியை சுற்றியுள்ள கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஜவுளிகள் மட்டுமில்லாமல் வீட்டு உபயோகத்திற்கான பொருட்களும், அலங்கார பொருட்களும், இதர உபயோக பொருட்களும் கடை வீதிகளில் உள்ள கடைகளிலும், சாலையோர கடைகளிலும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரே இடத்தில் பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் கிராமப்புறத்தை சேர்ந்த பொதுமக்கள் நகரப்பகுதிக்கு வருகின்றனர். இதில் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் கிராமங்களில் இருந்து வருகை தருகின்றனர்.
கட்டணமில்லா டிக்கெட்
தமிழக அரசின் விடியல் பயண திட்டத்தில் அரசு டவுன் பஸ்களில் கட்டணமில்லா டிக்கெட் முறை இருப்பதால் பெண்கள் இதனை அதிகமாக பயன்படுத்தி பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் பண்டிகைக்கான பொருட்கள் வாங்க புதுக்கோட்டை நகரில் குவிந்தனர். இதனால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேநேரத்தில் அரசு டவுன் பஸ்களிலும் பெண் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பொருட்கள் வாங்க வரும் போதும், பொருட்கள் வாங்கி விட்டு திரும்பி செல்லும் போதும் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் அதிகமாக பயணித்தனர். இதனால் இருக்கைகள் நிரம்பி நின்றபடியே பெண் பயணிகள் பலர் பயணித்தனர். அதேபோல அவர்களுடன் பொருட்கள் வாங்க வந்த ஆண்நபர்களும், சிறுவர்களும் கூட்ட நெரிசலில் பயணம் செய்தனர்.
ஒரு நடைக்கு 300 பேர் பயணம்
இது குறித்து போக்குவரத்து வட்டாரத்தில் தெரிவிக்கையில், தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்க நேற்றும் (அதாவது நேற்று முன்தினம்), இன்றும் (அதாவது நேற்றுஅரசு டவுன் பஸ்களில் கட்டணமில்லா டிக்கெட்டில் பெண் பயணிகள் கூட்டம் அதிகம். அரசு டவுன் பஸ்சின் ஒரு நடைக்கு 300 பேர் கட்டணமில்லா டிக்கெட்டில் பயணித்தனர். குறிப்பாக நகரப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் இருந்து பெண்கள் அதிகமாக பயணித்தனர். அதேபோல நகருக்குள் அந்த பஸ்கள் செல்லும் போது பொருட்கள் வாங்க இறங்குவதும், பின் மறுபஸ்சில் ஏறி பயணிப்பதும் என நகருக்குள் ஓடிய அரசு டவுன் பஸ்களிலும் பெண் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தொடர்ந்து பண்டிகையையொட்டி வருகிற நாட்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.
செலவு மிச்சம்
தமிழக அரசின் விடியல் பயண திட்டத்தின் மூலம் கட்டணமில்லா டிக்கெட் முறையால் பெண்கள் பண்டிகைக்காக பஸ்சில் பயணம் செய்கிற செலவு மிச்சமாகியுள்ளது. இதனால் அவர்கள் சிரமம் பார்க்காமல் கூட்ட நெரிசலிலும் கையில் பொருட்களுடன் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.