மணமேல்குடி ஒன்றியத்தில் இலக்கிய மன்றப் போட்டிகள்




புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிப்புக்குரிய  திரு சண்முகம் ஐயா அவர்களின் வழிகாட்டுதலின்படி  மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நடைப்பெற்ற இலக்கிய மன்றப் போட்டியினை  இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிப்பிற்குரிய திரு ஜீவானந்தம் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய திரு செழியன் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  இந்நிகழ்வில் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இலக்கிய மன்ற போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் மன்ற போட்டிகள் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கதை சொல்லுதல் பேச்சு போட்டி ,  கவிதை எழுதுதல் மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற  தமிழ் மற்றும் ஆங்கிலம்  மன்ற போட்டிகளில் நான்கு தலைப்புகளில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் நடுவர்களாக  முதுகலை ஆசிரியர்கள்  சொர்ணவள்ளி, நளினி , அகல்யா,  துரைராஜ். ராஜேஷ் குமார்,  வெற்றிச் செல்வன் , பட்டதாரி ஆசிரியர்கள் பிரதாப் சிங் இளங்கோவடிகள் ராஜமாணிக்கம் ஜெயானந்த் சகாய ராஜ் , வீரக்காளை   மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் திரு சசிகுமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

ஒவ்வொரு போட்டியிலும்  முதல் இடம் பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள். என் நிகழ்வில் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments