அன்னவாசலில் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது




அன்னவாசலில் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அன்னவாசல் கிளை மற்றும் அரசு சித்த மருத்துவமனை இணைந்து அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி பகுதி வீடுகளுக்கு வாகனம் மூலம் நேரடியாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கினா்.

நிகழ்வில் அரசு சித்த மருத்துவா் தாமரைச்செல்வன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அன்னவாசல் கிளை தலைவா் நசீா்,செயலா் அமானுல்லா, காஜா மைதீன், உமா் முக்தாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments